/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
அமராவதி அணையில் இருந்து புதிய பாசன வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்

ADDED : டிச 11, 2024 01:31 AM
அமராவதி அணையில் இருந்து புதிய
பாசன வாய்க்காலுக்கு நீர் திறப்பு நிறுத்தம்
கரூர், டிச. 11-
அமராவதி அணையில் இருந்து, புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.
திருப்பூர் மாவட்டம், உடுமலை பேட்டை அமராவதி அணைக்கு நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து, 279 கன அடியாக இருந்தது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர் மட்டம், 88.16 அடியாக இருந்தது. அணையில் இருந்து அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 475 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் திறக்கப்பட்ட, தண்ணீர் நேற்று நிறுத்தப்பட்டது.
* கரூர் அருகே, மாயனுார் கதவணைக்கு, நேற்று முன்தினம் காலை வினாடிக்கு, 3,422 கன அடி தண்ணீர் வந்தது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 2,243 கன அடியாக தண்ணீர் வரத்து குறைந்தது. அதில் காவிரியாற்றில், 1,523 கன அடி தண்ணீரும், மூன்று பாசன கிளை வாய்க்காலில், 720 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது.
* க.பரமத்தி அருகே, கார்வாழி ஆத்துப்பாளையம் அணைக்கு நேற்று காலை தண்ணீர் வரத்து வினாடிக்கு, 3 கன அடி வந்தது. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 22.63 அடியாக இருந்தது. நொய்யல் வாய்க்காலில் வினாடிக்கு, 55 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது.