ADDED : அக் 24, 2026 06:46 AM
அ நிறம் | அளவு
குளித்தலை:குளித்தலை அடுத்த கழுகூர் பஞ்., அக்காண்டிமேடு
கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை, 27. விவசாய கூலி தொழிலாளி. இவரது
மனைவி வள்ளி, 23.
இவர்களுக்கு கடந்த, எட்டு மாதங்களுக்கு முன்பு
திருமணம் நடைபெற்றது. இவர்கள் கூட்டு குடும்பமாக வசித்து
வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மதியம் 2:00 மணியளவில்,
தங்கதுரை தோட்டத்திற்கு சென்று விட்டு, பின்னர் வீட்டுக்கு வந்தார்.
அப்போது மனைவியை காணவில்லை. பல இடங்களில் தேடியும், விசாரித்தும்
எந்தவித தகவலும் கிடைக்கவில்லை.தோகைமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
