/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
மாயனுாரில் மீன் விற்பனை கூடம் திறக்கப்படுமா?
/
மாயனுாரில் மீன் விற்பனை கூடம் திறக்கப்படுமா?
ADDED : செப் 26, 2024 02:04 AM
கரூர்: கரூர் மாவட்டாம் மாயனுார் காவிரி ஆற்றில், 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மீன் பிடி தொழிலை நீண்ட காலமாக செய்து வரு-கின்றனர். மாயனுார் கதவணையில் காவிரி நீர் சேமிக்கப்படுகி-றது.
இதில், மீன்கள் வளர்க்கப்படுகின்றன. வளர்க்கப்படும் மீன்-களை உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று பிடித்து வந்து விற்-பனை செய்து வருகின்றனர். இங்கு, மீன் விற்பனை செய்ய இட-வசதியில்லை என்பதால், ஆற்றங்கரையோரம் விற்பனை செய்து வருகின்றனர். வெயில், மழை, காற்று என அனைத்து பருவநிலை மாற்றங்களில் போது, மீன் விற்பனை செய்ய மிகவும் சிரமப்-பட்டு வருகின்றனர்.
இந்த பகுதியில் மீன் வியாபாரிகளில் நலன் கருதி, விற்பனை கூடம் அமைத்து தர வேண்டும். இதன்மூலம் தரமான மீன்கள் விற்பனை செய்யப்படுவதோடு, பஞ்., நிர்வாகத்-திற்கு வருமானம் கிடைக்க
வாய்ப்பு ஏற்படும்.

