/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரம் வரும் 28ல் மேட்டூர் அணை மூடல்?
/
டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரம் வரும் 28ல் மேட்டூர் அணை மூடல்?
டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரம் வரும் 28ல் மேட்டூர் அணை மூடல்?
டெல்டா மாவட்டங்களில் நெல் அறுவடை தீவிரம் வரும் 28ல் மேட்டூர் அணை மூடல்?
ADDED : ஜன 15, 2025 12:48 AM
கரூர், : டெல்டா மாவட்டங்களில், நெல் அறுவடை தீவிரமாகியுள்ள நிலையில், மேட்டூர் அணை வரும், 28ல் மூடப்படும் என
தெரிகிறது.
தமிழகத்தில் தஞ்சாவூர் உள்ளிட்ட, டெல்டா மாவட்டங்களின் பாசன ஆதாரமாகவும், ஐந்து கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் மேட்டூர் அணை உள்ளது. வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும், குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணை ஜூன், 12ல் திறக்கப்பட்டு, ஜன., 28ல் மூடப்படும்.
கடந்தாண்டு ஜூன், 12ல்
மேட்டூர் அணை குறுவை சாகு
படிக்காக திறக்கப்பட்டது. அதை தொடர்ந்து சம்பா, தாளடி சாகுபடிக்கு தேவையான நீரை, டெல்டா விவசாயிகளுக்கு, மேட்டூர் அணை வழங்கியது. தற்போது, டெல்டா பகுதியில் சம்பா சாகுபடி அறுவடை தீவிரம்
அடைந்துள்ளது.
இந்நிலையில், தமிழகம், கர்நாடகாவின் சில பகுதிகளில், வட
கிழக்கு பருவ மழையும் நின்று விட்டது. மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்தை விட, திறப்பு அதிகமாக உள்ளதால், தண்ணீர் இருப்பும் குறைந்து வருகிறது. இதனால், மேட்டூர் அணை வரும், 28ல் மூட வாய்ப்புள்ளதாக, நீர்வளத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
இதுகுறித்து, அவர்கள்
கூறியதாவது:
கடந்தாண்டு ஜன., 28ல், மேட்டூர் அணை மூடப்படும் போது, அணை நீர்மட்டம் திருப்திகரமாக இருந்தது. அதேபோல் வரும், 28ல் அணை மூடப்படும் போது நீர்மட்டம், 100 அடி முதல், 105 அடி வரை இருக்கும் என கணிக்கப்படுகிறது. அணை மூடப்பட்டாலும், குடிநீர் தேவைக்காக வினாடிக்கு, 1,000 கன அடி தண்ணீர் திறக்க வாய்ப்புள்ளது.
மேலும், போதிய தண்ணீர் இருப்பு உள்ள நிலையில் வரும் ஜூன், 12 அல்லது அதற்கு முன்பாகவே, தொடர்ந்து நான்காவது ஆண்டாக, குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்க அதிகளவில் சாத்தியகூறுகள் உள்ளன.
இவ்வாறு கூறினர்.