/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரி நீர் திட்டம் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா?
/
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரி நீர் திட்டம் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா?
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரி நீர் திட்டம் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா?
பஞ்சப்பட்டி ஏரிக்கு காவிரி உபரி நீர் திட்டம் விவசாயிகள் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறுமா?
ADDED : ஆக 11, 2025 05:50 AM
கரூர்: காவிரி ஆற்றில் அதிகமாக செல்லும் உபரி நீரைக்கொண்டு, பஞ்சப்பட்டி ஏரியை நிரப்ப திட்டம் செயல்படுத்த வேண்டும் என விவ-சாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கடவூர் மலைப்பகுதி மற்றும் திண்டுக்கல் மாவட்ட வனப்பகுதிகளில், மழைக்-காலங்களில் பெய்யும் மழையால் காட்டாற்று வெள்ளம் உருவாகிறது. இதனால், வேளாண் பயிர்கள் சேதமடைவதை தடுக்கும் வகையில், கிருஷ்ணராயபுரம் அருகே பஞ்சப்பட்டியில், 1837ம் ஆண்டு, 1,140 ஏக்கரில் பஞ்சப்பட்டி ஏரி அமைக்கப்பட்டது. இதில், 2 டி.எம்.சி., தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரியால் சுற்று வட்டார நுாற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் பயனடைந்து வந்தன. நாளடைவில் பருவமழை தவறியதால், ஏரிக்கு வரும் நீரின் வரத்தும் இல்லாமல் போனது. தற்போது வரத்து வாய்க்கால்களும் துார்ந்து, 10 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் வரத்து இல்லாமல், கருவேலங்காடாக காட்சியளிக்கி-றது. காவிரி ஆற்றின் வெள்ள நீரை, குழாய்கள் அமைத்து பஞ்சப்பட்டி ஏரியை நிரப்பும் திட்டம் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் கூறியதாவது:
மாயனுார் கதவணையில் இருந்து வெறும், 25 கி.மீ., தொலைவில்தான் பஞ்சப்பட்டி ஏரி உள்-ளது. ஆனால், 100 கி.மீ., தொலைவில் உள்ள திண்டுக்கல், 350 கி.மீ., தொலைவில் உள்ள ராம-நாதபுரம் போன்ற மாவட்டங்களுக்கு இங்குள்ள காவிரி ஆற்றில் இருந்து குழாய்கள் மூலம் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தால் தண்ணீரை எடுத்து செல்கின்றனர். 25 கி.மீ., தொலைவில் உள்ள பஞ்சப்பட்டி ஏரிக்கு குழாய்கள் மூலம் வெள்ள காலங்களில் காவிரி உபரி நீரை எடுத்து வருவதற்கு யாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்த, 15 நாட்கள் முன் காவிரி ஆற்றில் வினாடிக்கு, 1.10 லட்சம் கன அடிநீர் வரை கரை புரண்டு ஓடியது. பஞ்சப்பட்டி ஏரி எப்போதும் போல வறண்டே காணப்படுகிறது. காவிரி ஆற்றின் உபரிநீரை ஏரிக்கு கொண்டு வரும் வகையிலான திட்டத்தை அரசு விரைந்து செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.