/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் ஆசை நிறைவேறுமா?
/
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் ஆசை நிறைவேறுமா?
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் ஆசை நிறைவேறுமா?
க.பரமத்தியில் புதிய பஸ் ஸ்டாண்ட் பொதுமக்கள் ஆசை நிறைவேறுமா?
ADDED : ஜன 15, 2024 10:36 AM
கரூர்: 'க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க பஞ்., ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கரூர் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள க.பரமத்தியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம், உதவி தொடக்க கல்வி அலுவலகம், அரசு மேல்நிலைப்பள்ளி உட்பட, 10க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன. மேலும், அந்த பகுதியை சுற்றியுள்ள முன்னுார், குப்பம், பவுத்திரம், நெடுங்கூர், காருடையாம்பாளையம், நடந்தை, ஆரியூர் உள்ளிட்ட, 10க்கும் மேற்பட்ட பஞ்.,களில் உள்ள, 200க்கும் மேற்பட்ட குக்கிராமங்கள் உள்ளன.
இப்பகுதியில் உள்ள மக்கள் வேலைக்காகவும், வெளியூர் செல்லவும், வெளியூர்களிலிருந்து பரமத்திக்கு தினசரி ஏராளமான மக்கள் பஸ்சில் பயணம் செல்கின்றனர். அப்போது, நுாற்றுக்கணக்கான மக்கள் ரோட்டோரத்தில் பல மணிநேரம் காத்து கிடப்பதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது.
மேலும், பள்ளி மாணவர்கள் ஏராளமானோர் பஸ் ஸ்டாப்பில் நிற்பதால் பல்வேறு பிரச்னைக்கு ஆளாக வேண்டிய நிலை உள்ளது. எனவே, பொதுமக்கள் மற்றும் பஸ் பயணிகளின் நலன்கருதி, க.பரமத்தி பகுதியில் புதிய பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டியது அவசியம்.