/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி
/
தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி
தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி
தோகைமலை நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி
ADDED : செப் 30, 2025 01:02 AM
குளித்தலை, தோகைமலை நெடுஞ்சாலையில், ஆக்கிரமிப்பு அளந்து அத்து காட்டும் பணி நடந்தது.
குளித்தலை அடுத்த மணப்பாறை நெடுஞ்சாலையில், தோகைமலை செக்போஸ்ட் பாளையம் பிரிவு சாலை முதல், பாதிரிப்பட்டி பிரிவு சாலை வரை இருபுறங்களிலும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருவதாகவும், ஆக்கிரமிப்புகளை அகற்றிடகோரி வந்த புகாரையடுத்து, மதுரை உயர்நீதிமன்ற உத்தரவின்படி நேற்று காலை, 10:30 மணியளவில் நெடுஞ்சாலை துறை மற்றும் வருவாய் துறையினர் இணைந்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை அளந்து (மார்க்) அத்து காட்டும் பணியில் ஈடுபட்டனர்.
ஆக்கிரமிப்பு அகற்றும் பணி அளவிடும் பணியில், குளித்தலை துணை தாசில்தார் நீதிராஜன் தலைமையில், வட்ட சார் ஆய்வாளர் மகேந்திரன், ஆர்.ஐ., அரவிந்த் மற்றும் வருவாய் துறையினர், தரகம்பட்டி நெடுஞ்சாலை துறை ஏ.இ., கோகுல் மற்றும் சாலை பணியாளர்கள் பங்கேற்றனர்.