/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
குளித்தலையில் கலர் கோல மாவுகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
/
குளித்தலையில் கலர் கோல மாவுகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
குளித்தலையில் கலர் கோல மாவுகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
குளித்தலையில் கலர் கோல மாவுகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள்
ADDED : ஜன 04, 2025 01:18 AM
குளித்தலை, ஜன. 4-
குளித்தலை பகுதியில், பொங்கலை முன்னிட்டு கலர் கோல மாவுகளை தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை வரும், 14ல் தை பொங்கல், 15ல் மாட்டு பொங்கல், 16ல் உழவர் திருநாள் கொண்டாடுவதற்கு அனைத்து தரப்பு மக்களும், விவசாயிகளும் ஆர்வமுடன் எதிர்பார்த்து உள்ளனர்.
கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, போதிய மழை இல்லாமல் முழுமையான விவசாயம் செய்ய முடியாமல் விவசாயிகள் தவித்து வந்தனர். இந்நிலையில், கடந்த மூன்று ஆண்டுகளாக பருவ மழை கணிசமாக பெய்து வருவதால், அனைத்து விவசாய வயல்களிலும் பல்வேறு சாகுபடிகளை விவசாயிகள் தொடங்கி உள்ளனர்.
இதேபோல் வாய்க்கால் பாசன விவசாயிகளும் விவசாயம் செய்து வருகின்றனர். சென்ற ஆண்டுகளை விட, இந்தாண்டு கால்நடைகளுக்கான தீவனங்களும் எளிதாக கிடைப்பதால், கால்நடை வளர்ப்பு விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். தமிழர்களின் பாரம்பரியமிக்க திரு
விழாவான பொங்கல் பண்டிகைக்காக கரும்பு, கோல மாவு, மண் பானை, மஞ்சள் சாகுபடி உள்பட பொங்கல் பண்டிகைக்கு பயன்படுத்தும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்வதற்காக வியாபாரிகளும் முழுவீச்சில் தயார் படுத்தி வருகின்றனர்.
இதேபோல் அனைத்து வீடுகளின் முன்புறமும், கோவிலிலும், அலுவலக வளாகத்திலும் வண்ண வண்ண கோலமிடுவர். இதுனால், பெண்கள் அதிகமாக விரும்பும், கோலமாவுகளை தயாரிக்கும் பணி சுறுசுறுப்படைந்துள்ளது. தொழிலாளர்கள் கோலப்பொடிகளை வண்ண வண்ண கலர்களில் தயார்ப்
படுத்தி, பேக் செய்து விற்பனையில்
ஈடுபடும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.