/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
வரும் 16ல் இளையோர் கலைத்திருவிழா போட்டி
/
வரும் 16ல் இளையோர் கலைத்திருவிழா போட்டி
ADDED : டிச 13, 2024 08:45 AM
கரூர்: கரூர் தான்தோன்றிமலை அரசு கல்லுாரியில், மாவட்ட நேரு யுவ கேந்திரா சார்பில் இளையோர் கலைத்திருவிழா வரும், 16ல் நடக்கி-றது.
இங்கு, யுவ உத்சவ் இந்தியா @ 2047 என்ற தலைப்பில், மாவட்ட அளவிலான அறிவியல் புதுமை கண்காட்சி, கவிதை போட்டி, ஓவிய போட்டி, மொபைல் போனில் புகைப்படம் எடுத்தல் போட்டி ஆகியவை நடைபெறும். மேலும் கிராமிய குழு நடன போட்டி நடத்தப்-படும். வளர்ந்த இந்திய தீர்வுகள், அடிமை மனோ-பாவத்தை நீக்குதல், நமது கலாசாரம் மற்றும் பாரம்பரியத்தின் பெருமைகளை உணர்தல், நாட்டு மக்களிடையே ஒற்றுமை, குடிமக்கள் தங்-களது கடமைகளை உணர்தல் எனும் ஐந்து தலைப்புகளில் போட்டி நடக்கிறது.
இதில் பங்கேற்போர், 15 முதல் 29 வயதுக்கு உட்-பட்டவராக இருத்தல் வேண்டும். ஒருவர் ஒரு போட்டியில் மட்டுமே கலந்து கொள்ள முடியும். கரூர் மாவட்டத்தில் வசிப்பவராக இருத்தல் வேண்டும். பிற மாவட்டங்களிலிருந்து, கரூர் மாவட்டத்தில் பயிலும் மாணவர்கள் தங்கள் கல்வி நிறுவன தலைவரிடமிருந்து உறுதி சான்று பெற்று விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.
போட்டிகளில் வெற்றி பெறுவோர், விதிமுறைக-ளின்படி மாநில அளவிலான போட்டிகளில் பங்-கேற்க தகுதி பெறுவர். போட்டிகளில் கலந்து கொள்ள ttps://forms.gle/U2JYkuUw7qAwryg79 இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும். மேலும் விப-ரங்களுக்கு நேரு யுவ கேந்திரா, 148,/2, நவல-டியான் இல்லம், மில்கேட் அருகில், தான்தோன்றி-மலை, கரூர் என்ற முகவரியில், 9786 192132, 80749 07405 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இத்தகவலை கலெக்டர் தங்கவேல் தெரிவித்-துள்ளார்.

