/
உள்ளூர் செய்திகள்
/
கரூர்
/
பைக் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
/
பைக் மீது டிப்பர் லாரி மோதி வாலிபர் பலி
ADDED : மார் 05, 2025 07:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கரூர்: க.பரமத்தி அருகே, டிப்பர் லாரி மோதிய விபத்தில், பைக்கில் சென்ற வாலிபர் உயிரிழந்தார்.
கரூர் மாவட்டம், க.பரமத்தி கஸ்பா நெடுங்கூர் பகுதியை சேர்ந்த ராஜன் என்பவரது மகன் ரமேஷ், 35, இவர், நேற்று முன்தினம் ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில், கரூர்-கோவை சாலை காருடையாம்பாளையம் பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கரூர் பொரணி பகுதியை சேர்ந்த பாலசுப்பிரமணி, 51; என்பவர் ஓட்டி சென்ற டிப்பர் லாரி, பைக் மீது மோதியது. அதில், கீழே விழுந்ததில் தலையில் படுகாயமடைந்த ரமேஷ், கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.க.பரமத்தி போலீசார் விசாரிக்கின்றனர்.