/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழி காட்டுதல் நிகழ்ச்சி
/
அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழி காட்டுதல் நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழி காட்டுதல் நிகழ்ச்சி
அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு தொழில்நெறி வழி காட்டுதல் நிகழ்ச்சி
ADDED : அக் 04, 2024 01:21 AM
அரசு பொறியியல் கல்லுாரி மாணவர்களுக்கு
தொழில்நெறி வழி காட்டுதல் நிகழ்ச்சி
கிருஷ்ணகிரி, அக். 4-
கிருஷ்ணகிரி மாவட் டம், பர்கூர் அரசு பொறியியல் கல்லுாரியில், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் சார் பில், மாணவ, மாணவியருக்கான சிறப்பு தொழில்நெறி வழிக்காட்டுதல் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கல்லுாரி மெக்கானிக்கல் பிரிவுத்துறை தலைவர் திரு மால் தலைமை வகித்தார். மென்திறன் பயிற்சியாளர் நிமலன் மரகதவேல், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டும் நிகழ்வுகளை எடுத்துக்காட்டி ஊக்குவித்தார்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கவுரிசங்கர் பேசியதாவது:
மெக்கானிக்கல் இன்ஜினியரிங் முடிப்பவர்களுக்கு, அரசு மற்றும் தனியார் துறைகளில் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக, தொழிற்சாலைகள், கார் தயாரிப்பு நிறுவனங்கள், ஆட்டோமொபைல் சாதன உற்பத்தி மையங்களில் பணிபுரிய வாய்ப்புகள் அதிகம். இதேபோல், இந்தியன் ஆயில் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணியில் சேரலாம். இதற்காக மாணவ, மாணவியர், 'கேட்' நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். யு.பி.எஸ்.சி., நடத்தும் தேர்வெழுதி இந்திய ரயில்வே, பாதுகாப்புத்துறை, மத்திய பொதுப்பணித்துறையில் சேரலாம்.
மேலும், டி.என்.பி.எஸ்.சி., தேர்வெழுதி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவி பொறியாளர் பணியில் சேரலாம். அரசு போக்குவரத்து கழகங்கள், மின் வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் மெக்கானிக்கல் இன்ஜினியர்களுக்கு பணிவாய்ப்புகள் உள்ளன. இதற்காக மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்திலுள்ள தன்னார்வ வட்டம் மூலம், அரசு போட்டி தேர்வுகளில் பங்கேற்க இலவச பயிற்சியும், மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகிறது.
இவ்வாறு, அவர் பேசினார்.

