/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஊழியரை கொல்ல முயற்சிவட மாநில தொழிலாளி கைது
/
ஊழியரை கொல்ல முயற்சிவட மாநில தொழிலாளி கைது
ADDED : ஜன 18, 2025 01:47 AM
ஊழியரை கொல்ல முயற்சிவட மாநில தொழிலாளி கைது
ஓசூர்,:பீகார் மாநிலத்தை சேர்ந்தவர்கள் தினேஷ்குமார், 31, திலிப்ஷா, 46. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வெல்டிங் வேலை செய்து வருகின்றனர். நிறுவனத்தின் முதல் தளத்தில் உள்ள அறையில் தங்கியுள்ளனர். கடந்த, 15 இரவு இருவரும் தங்களது அறையில் மது அருந்தினர். அப்போது அவர்களுக்குள் வாய்த்தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரமடைந்த திலிப் ஷா, தன்னிடம் இருந்த கத்தியால் தினேஷ்குமாரை வெட்டி விட்டு, இம்பு கம்பியால் தலையில் தாக்கி கொலை செய்ய முயன்றார். உடலில் பல இடங்களில் காயமடைந்த தினேஷ்குமார், ஓசூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் கொடுத்த புகார்படி, ஓசூர் டவுன் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிந்து, திலிப்ஷாவை நேற்று முன்தினம் கைது செய்தனர்.