/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தி.மு.க., முன்னாள் நகர செயலர்பாபு சிவக்குமார் படத்திறப்பு விழா
/
தி.மு.க., முன்னாள் நகர செயலர்பாபு சிவக்குமார் படத்திறப்பு விழா
தி.மு.க., முன்னாள் நகர செயலர்பாபு சிவக்குமார் படத்திறப்பு விழா
தி.மு.க., முன்னாள் நகர செயலர்பாபு சிவக்குமார் படத்திறப்பு விழா
ADDED : மார் 15, 2025 02:20 AM
தி.மு.க., முன்னாள் நகர செயலர்பாபு சிவக்குமார் படத்திறப்பு விழா
ஊத்தங்கரை:கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை தனியார் திருமண மண்டபத்தில், தி.மு.க., முன்னாள் பேரூராட்சி தலைவரும், நகர செயலருமான பாபு சிவக்குமாரின் முதலாம் ஆண்டு நினைவு அஞ்சலி மற்றும் படத்திறப்பு விழா நேற்று நடந்தது.
வித்யாமந்திரி கல்வி நிறுவனங்களின் தாளாளர் சந்திரசேகரன், அதியமான் கல்வி நிறுவனங்களின் நிறுவனர் திருமால்முருகன் ஆகியோர், பாபு சிவக்குமார் படத்தை திறந்து வைத்து, மலர் துாவி அஞ்சலி செலுத்தினர். பாபு சிவக்குமாரின் நினைவாக ஆட்டோ ஓட்டுனர்கள், துாய்மை பணியாளர்கள், ஏழை மக்களுக்கு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டது. தி.மு.க., மாவட்ட பொருளாளர் கதிரவன், மாநில செயற்குழு உறுப்பினர் செந்தில், பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன், பேரூராட்சி தலைவர் அமானுல்லா, மாவட்ட மருத்துவர் அணி தலைவர் டாக்டர் கந்தசாமி.
முன்னாள் ஒன்றிய குழு தலைவர்கள் உஷாராணி குமரேசன், விஜயலட்சுமி பெருமாள், ஒன்றிய செயலாளர் எக்கூர் செல்வம், ரஜினிசெல்வம், குண வசந்தரசு, நரசிம்மன், திராவிட கழகம் ராஜா, நகர அவை தலைவர் தணிகை குமரன், நகர பொருளாளரும், பேரூராட்சி கவுன்சிலருமான கதிர்வேல், மகளிரணி சின்னதாய் மற்றும் அனைத்து கட்சி பிரமுகர்கள் ஊர் மக்கள் திரளாக கலந்து கொண்டு, பாபு சிவக்குமார் படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தினர்.
ஏற்பாடுகளை, டி.எம்.ஆர்.டி.ஏ.,மாநில தலைவர் சோமசுந்தரம், நகர செயலர் தீபக் ஆகியோர் செய்திருந்தனர். பேரூராட்சி துணைத் தலைவர் கலைமகள் தீபக் நன்றி கூறினார்.