/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கிருஷ்ணகிரியிலிருந்து எஸ்.இ.டி.சி., பஸ் சேவை துவங்குவது எப்போது
/
கிருஷ்ணகிரியிலிருந்து எஸ்.இ.டி.சி., பஸ் சேவை துவங்குவது எப்போது
கிருஷ்ணகிரியிலிருந்து எஸ்.இ.டி.சி., பஸ் சேவை துவங்குவது எப்போது
கிருஷ்ணகிரியிலிருந்து எஸ்.இ.டி.சி., பஸ் சேவை துவங்குவது எப்போது
ADDED : ஜன 15, 2025 12:38 AM
கிருஷ்ணகிரி, :மாவட்டத்தின் தலைமையிடமாக இருந்தும், கிருஷ்ணகிரியில் இருந்து அதிவிரைவு பஸ் வசதியோ, நிறுத்தமோ இல்லை. குறைந்தபட்சம் கிருஷ்ணகிரியில் இருந்து செல்லும் வகையில் புக்கிங் வசதியாவது செய்ய கோரிக்கை எழுந்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், 20 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். தொழில் நகரமான ஓசூர், கிருஷ்ணகிரியில், 25 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்களாக இங்கேயே தங்கி பணிபுரிகின்றனர். கிருஷ்ணகிரியில் ரயில்வே ஸ்டேஷனும் இல்லை. எஸ்.இ.டி.சி., எனும் அதிவேக பஸ்களுக்கான பதிவு மையமும் இல்லை. எஸ்.இ.டி.சி., பஸ்களுக்கு, கிருஷ்ணகிரியில் நிறுத்தும் வசதி கூட செய்து தரப்படவில்லை.
தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள், விசேஷ நாட்களிலும், பண்டிகை காலங்களிலும் தங்கள் ஊருக்கு செல்வதில் சிரமப்படுகின்றனர். எஸ்.இ.டி.சி., பஸ்கள், பெங்களூருவுக்கும், தமிழத்திற்கும் ஓசூர், கிருஷ்ணகிரி மார்க்கமாகவே செல்கிறது. அனைத்து பஸ்களும் ஓசூர் பஸ் ஸ்டாண்ட் செல்கிறது. ஆனால் கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வருவதில்லை. பஸ்சில் சீட்கள் காலியாக இருந்தால் மட்டுமே, கிருஷ்ணகிரி
வருகின்றனர்.
ஆன்லைன் மூலம் புக்கிங் செய்தால் கூட புறப்படும் இடம், இறங்கும் இடத்தில் கிருஷ்ணகிரி இல்லை. மாவட்ட தலைமையிடமான, கிருஷ்ணகிரியிலிருந்து தொலைதுார பயணம் மேற்கொள்பவர்களின் நிலை இவ்வாறு உள்ளது. அதேபோல தென் மாவட்டங்
களுக்கு செல்வோர், திரும்பும் போதும் கிருஷ்ணகிரிக்கு, ஓசூர் கட்டணத்துடனேயே ஏற்றுகின்றனர்.
கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்டில் விடாமல், ராயக்கோட்டை மேம்பாலத்திற்கு கீழ் இறக்கி விட்டு செல்கின்றனர். கட்டாயமாக ஊருக்கு செல்ல வேண்டும் என்றால், மூன்று மடங்கு அதிக கட்டணத்தில் ஆம்னி பஸ்களில் செல்லும் நிலை உள்ளது.
எஸ்.இ.டி.சி., பஸ்கள், கிருஷ்ணகிரி பஸ் ஸ்டாண்ட் வந்து செல்வது கட்டாயமாக்கப்பட வேண்டும். கிருஷ்ணகிரியில் முன்பதிவு மையம் அமைக்க வேண்டும். அவ்வாறு செய்தால், ஆம்னி பஸ்களில் அதிக கட்டணம் கொடுத்து செல்வது குறையும் என்பது மக்களின் கோரிக்கையாக உள்ளது.