/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
/
பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
ADDED : மார் 20, 2025 01:27 AM
பொது இடங்களில் தி.மு.க., கொடி கம்பங்களை அகற்ற அறிவுறுத்தல்
கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தில், பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள, தி.மு.க., கொடி கம்பங்களை உடனடியாக அகற்ற வேண்டுமென, மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., கூறியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள அனைத்து அரசியல் கட்சிகள், இயக்கங்கள், ஜாதி, மத ரீதியிலான அனைத்து கொடி கம்பங்களையும், 12 வாரங்களுக்குள் அகற்ற, உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.
நீதிமன்ற தீர்ப்பையேற்று பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ள, தி.மு.க., கொடிக்கம்பங்களை அகற்ற, தி.மு.க., பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். எனவே, கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர், வார்டு, கிளைக் கழக நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள தேசிய நெடுஞ்சாலை, மாநில நெடுஞ்சாலை மற்றும் உள்ளாட்சி துறைக்கு சொந்தமான இடங்களிலும் பொது இடங்களிலும் வைத்துள்ள, தி.மு.க., கொடிக்கம்பங்களை, 15 நாட்களுக்குள் அகற்ற வேண்டும்.
அகற்றப்பட்ட கட்சி கொடி கம்பங்களை, அந்தந்த பகுதிகளை சார்ந்த கட்சி தொண்டர்களுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வைத்து, தி.மு.க., கொடியை ஏற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.