/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நீர்மோர் பந்தல் திறப்பு
/
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நீர்மோர் பந்தல் திறப்பு
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நீர்மோர் பந்தல் திறப்பு
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நீர்மோர் பந்தல் திறப்பு
ADDED : ஏப் 06, 2025 01:04 AM
அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் நீர்மோர் பந்தல் திறப்பு
போச்சம்பள்ளி:கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி நான்கு ரோடு சந்திப்பில், பர்கூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், நீர்மோர் பந்தல் நேற்று திறக்கப்பட்டது. இதில் அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி, கிருஷ்ணகிரி
எம்.எல்.ஏ., அசோக்குமார், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ்ச்செல்வம் மற்றும் போச்சம்பள்ளி ஒன்றிய செயலாளர் திருமாள் உள்ளிட்ட அ.தி.மு.க.,வினர் கலந்து கொண்டனர். இதில் வெள்ளரி பிஞ்சு, நீர்மோர், கூல்டிரிங்ஸ், இளநீர், தர்பூசணி உள்ளிட்டவை பொது
மக்களுக்கு வழங்கப்பட்டது.அதேபோல், காவேரிப்பட்டணம் ஒன்றியம், புலியூரில் தெற்கு ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகளால் நீர்மோர் பந்தல் திறக்கப்பட்டது.
* ஓசூர் மாநகராட்சி முனீஸ்வர் நகர் சர்க்கிள், ரயில்வே ஸ்டேஷன், உழவர் சந்தை, உழவர் சந்தை, ஓசூர் பஸ் ஸ்டாண்ட் ஆகிய, 4 இடங்களில், மாநகர, தி.மு.க., சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு நேற்று நடந்தது. பகுதி செயலாளர்கள் திம்மராஜ், வெங்கடேஷ், மாநகர துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன், செந்தில்குமார் தலைமை வகித்தனர். மாநகர செயலாளர் மேயர் சத்யா முன்னிலை வகித்தார். கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., தண்ணீர் பந்தல்களை திறந்து வைத்து, பொதுமக்களுக்கு மோர், இளநீர், தர்ப்
பூசணி, வெள்ளரி போன்றவற்றை வழங்கினார். துணை மேயர் ஆனந்தய்யா, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா, மாணவரணி மாவட்ட அமைப்பாளர் கண்ணன், பொறியாளர் அணி மாநில துணை செயலாளர் ஞானசேகரன் உட்பட பலர் பங்கேற்றனர்.