/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
/
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
தேசிய திறனாய்வு தேர்வில் வெற்றி மாணவ, மாணவியருக்கு பாராட்டு
ADDED : ஏப் 17, 2025 01:30 AM
பாப்பிரெட்டிப்பட்டி:--தர்மபுரி மாவட்டம், கடத்துார் வட்டாரத்தில், 64 தொடக்கப் பள்ளிகளும், 14 நடுநிலைப் பள்ளிகளும் செயல்படுகின்றன. நடுநிலை பள்ளியில், 278 மாணவர்கள் பயின்று வருகின்றனர். இதில், தேசிய திறனாய்வு தேர்வை, 200 மாணவர்கள் எழுதினர். அதில், ஒன்பது பள்ளிகளில் இருந்து, 16 மாணவ, மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதே போன்று வித்யா தியான் பள்ளியில் சேர, எழுதிய தேர்வில் நத்தமேடு அரசு தொடக்கப்பள்ளி மாணவர்கள், 2 பேர் தேர்ச்சி பெற்றனர்.
தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்த தலைமை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், மற்றும், 100 சதவீதம் வாசித்தல், எழுதும் திறன் முழுமை பெற வைத்த, 11 பட்டதாரி ஆசிரியர்கள் உள்ளிட்ட, 51 ஆசிரியர்களுக்கும் பரிசுகள் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டு விழா நிகழ்ச்சி கடத்தூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது.
இதில், அரூர் மாவட்ட கல்வி அலுவலர் (தொடக்க கல்வி)சின்ன மாது, தேசிய திறனாய்வு தெருவில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கும், அவர்களுக்கு உறுதுணையாக இருந்த ஆசிரியர்களுக்கும், சான்றிதழ்கள் பரிசுகள் வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில் வட்டார கல்வி அலுவலர்கள் பச்சியப்பன், மகேந்திரன் உள்ளிட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.