/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு கிருஷ்ணகிரி, மே 20
/
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு கிருஷ்ணகிரி, மே 20
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு கிருஷ்ணகிரி, மே 20
கே.ஆர்.பி., அணையில் நீர்திறப்பு அதிகரிப்பு கிருஷ்ணகிரி, மே 20
ADDED : மே 20, 2025 02:15 AM
கிருஷ்ணகே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு, 1,275 கன அடியாக இருந்த நிலையில், வினாடிக்கு, 1,213 கன அடியாக நீர் திறக்கப்பட்டது.
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி., அணைக்கு நீர்வரத்து கடந்த, 16ல் வினாடிக்கு, 548 கன அடியாகவும், பின் கன மழையால் கடந்த, 17ல், 1,152 கன அடியாகவும் அதிகரித்து, அணை நீர்மட்டம், 50 அடியை எட்டியது. கடந்த, 18ல் அணைக்கு நீர்வரத்து, 999 கன அடியாக இருந்த நிலையில் தொடர் மழையால் நேற்று, 1,275 அடியாக அதிகரித்தது. இதனால், அணையின் மூன்று சிறிய மதகின் மூலம் வினாடிக்கு, 1,050 கன அடி, இடது மற்றும் வலது புற வாய்க்காலில், 163 கன அடி என மொத்தம், 1,213 கன அடி நீர் திறக்கப்பட்டது. இதனால், தென்பெண்ணை ஆற்றின் இருகரையையும் தொட்டபடி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.
அணை நீர்மட்டம் மொத்தமுள்ள, 52 அடியில் நேற்று, 50.25 அடியாக இருந்தது. கர்நாடகா மாநிலத்தில் இருந்து சுத்திகரிக்காமல், தொழிற்சாலை கழிவுகளை, தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடுவதால், கே.ஆர்.பி., அணையில் திறக்கப்படும் நீரில், ரசாயன நுரை ஏற்பட்டு, தரைப்பாலத்தில் தேங்கி நின்றது.