/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மின் இணைப்பு கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
/
மின் இணைப்பு கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
ADDED : மார் 25, 2025 12:42 AM
மின் இணைப்பு கோரி பெண் தீக்குளிக்க முயற்சி
தர்மபுரி:நல்லம்பள்ளி ஒன்றியம், மானியதஹள்ளி பஞ்.,க்கு உட்பட்ட அஜ்ஜிப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி பழனி. இவரது மனைவி ராணி, 52. இவர்களுக்கு, 2 குழந்தைகள். நேற்று கலெக்டர் அலுவலகத்திற்கு ராணி மனு அளிக்க வந்தார். அப்போது தன் உடல் மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீக்குளிக்க முயன்றார். அங்கிருந்த போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்தனர்.
எங்கள் கிராமத்திலுள்ள பூர்வீக நிலத்தில், வீடு கட்டி வந்தோம். புதிய வீட்டிற்கு மின் இணைப்பு வழங்கக்கோரி, மின்வாரியத்தில், 5,405 ரூபாய் ஆன்லைனில் செலுத்திய பின், அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தேன். குழந்தைகளுடன் இருட்டில் வசிப்பதால், ஏற்பட்ட மன உளைச்சலில் தீக்குளிக்க முயன்றதாக தெரிவித்தார். போலீசார் ராணியை தர்மபுரி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றனர்.
*********************