/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரூர் அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் முதலிடம்
/
அரூர் அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் முதலிடம்
அரூர் அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் முதலிடம்
அரூர் அரசு பள்ளி மாணவர்கள் தடகள போட்டியில் முதலிடம்
ADDED : செப் 10, 2024 05:07 AM
அரூர்: அருர் சரக தடகள போட்டிகள் ஆர்.கோபிநாதம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. இதில், 1,800க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர். போட்டிகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதிசந்திரா துவக்கி வைத்தார். ஜூனியர் பிரிவில், 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில், அரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மெல்வின், தேவானந்த் ஜெரோம், கணேஷ், விஷ்ணு ஆகியோர் முதலிடம் பெற்றனர். 80 மீட்டர்
தடை ஓட்டத்தில் தேவானந்த் ஜெரோம் இரண்டாமிடத்தையும், கணேஷ் மூன்றாமிடமும் பெற்-றனர். குண்டு எறிதலில் மெல்வின் இரண்டாமிடம் பிடித்தார். சீனியர் பிரிவில், 200 மீ., ஓட்டத்தில் அப்துல் ரகுமான் இரண்டா-மிடம்
பெற்றார்.வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்களுக்கு பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள் பழனிதுரை, சங்கர், முருகேசன், வெங்கடாசலம் ஆகியோரை, தலைமையாசிரியர் ஆறுமுகம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.