/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மருத்துவமனைகளில் ஆட்குறைப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
/
மருத்துவமனைகளில் ஆட்குறைப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவமனைகளில் ஆட்குறைப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
மருத்துவமனைகளில் ஆட்குறைப்பை கண்டித்து டாக்டர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:17 AM
கிருஷ்ணகிரி, தமிழகத்தில், அரசு மருத்துவமனைகளில் ஆட்குறைப்பு செய்வதை கண்டித்து, அரசு மருத்துவர்கள் சங்கத்தினர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லுாரியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சங்க மாவட்ட தலைவர் டாக்டர் முத்துசாமி தலைமை வகித்தார். துணைத்தலைவர் மஞ்சித்குமார், செயலாளர் கோகுல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழகத்தில் புதிதாக தொடங்கப்பட்ட புதிய மருத்துவமனைகளுக்கு, மருந்துவர்கள் மற்றும் பிற பணியிடங்கள் உருவாக்காமல், பழைய, 11 மருத்துவக் கல்லூரியில் உள்ள மருத்துவர்களின் பணியிடத்தை குறைப்பு செய்து, அவர்களை புதிய மருத்துவமனைகளுக்கு நியமிப்பதன் மூலம், மருத்துவர்களின் பணிச்சுமை அதிகரிக்கிறது. இதனால், நோயாளிகள் பாதிக்கப்படுகின்றனர்.
மேலும், தேசிய மருத்துவ ஆணையத்தின் பரிந்துரை என்கிற பெயரில், மருத்துவர்களின் பணியிட குறைப்பு செய்வது தவறானது. மருத்துவர்கள் நலன், மருத்துவர்களுக்கு வகுப்பு எடுப்பதை தவிர பல்வேறு மருத்துவக முகாம்களில் கலந்து கொள்கின்றனர். இதற்கென்று தனியாக மருத்துவர்கள் இல்லை. எனவே, மருத்துவர்கள் பணியிட குறைப்பை, உடனடியாக நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி கோஷம் எழுப்பினர்.

