/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
/
அ.தி.மு.க., பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ADDED : நவ 12, 2025 01:17 AM
போச்சம்பள்ளி, பர்கூர் சட்டமன்ற தொகுதி, பர்கூர் கிழக்கு ஒன்றியம், கண்ணன்டஹள்ளி தனியார் திருமண மண்டபத்தில், அ.தி.மு.க.,வின் வளர்ச்சி பணிகள் குறித்தும், மக்கள் பணிகள் குறித்தும், பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளர் முனுசாமி தலைமை வகித்தார். கூட்டத்தில், பூத் கமிட்டி நிர்வாகிகள், தகவல் தொழில்நுட்ப நிர்வாகிகள் மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பூத் கமிட்டி நிர்வாகிகளும், அ.தி.மு.க., ஆட்சியல் மக்களுக்கு நிறைவேற்றப்பட்ட நல திட்டங்கள் மற்றும் உதவிகள் குறித்து, வீடு, வீடாக சென்று திண்ணை பிரசாரம் செய்து, ஓட்டு சேகரிக்க தெளிவாக எடுத்து கூறப்பட்டது.
இதில், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் கிருஷ்ணகிரி அசோக்குமார், ஊத்தங்கரை தமிழ்ச்செல்வம் மற்றும் பர்கூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால், திருமால், கிருஷ்ணன், மாதையன் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

