/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
/
அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:17 AM
ஓசூர், தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தினர் சார்பில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அஞ்செட்டி, சூளகிரி, தேன்கனிக்கோட்டை, ஓசூரில் நேற்று தனித்தனியாக ஆர்ப்பாட்டம் நடந்தது. அந்தந்த வட்ட தலைவர்கள் முனிராஜ், முனியப்பா, முனிராஜூலு, ரங்கநாதன் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் துரை, மாநில செயற்குழு உறுப்பினர் சீனிவாசலு, மாவட்ட செயலாளர் முருகன் ஆகியோர், கோரிக்கை குறித்து பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில், தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டசபை தேர்தலின் போது அளித்த வாக்குறுதியின் படி, புதிய பென்சன் திட்டத்தை கைவிட்டு, பழைய பென்சன் திட்டத்தை கொண்டு வர வேண்டும். 70 வயதை கடந்தவர்களுக்கு, 10 சதவீதம் கூடுதலாக ஓய்வூதியம் வழங்க வேண்டும். பட்டு வளர்ச்சித்துறையில் தினக்கூலி, சத்துணவு, அங்கன்வாடி, வனக்காவலர், வருவாய் கிராம உதவியாளர், பஞ்., எழுத்தர் ஆகியோருக்கு குறைந்தப்பட்ச ஓய்வூதியமாக, 7,850 ரூபாய் வழங்க வேண்டும், என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து கோஷம் எழுப்பினர்.
* ஊத்தங்கரை, பி.டி.ஓ., அலுவலகம் முன்பு, தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வு ஊதியர் சங்கம் சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத்தலைவர் திருநாவுக்கரசு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

