/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அடிப்படை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
/
அடிப்படை வசதி செய்து தர பொதுமக்கள் கோரிக்கை
ADDED : செப் 12, 2024 07:11 AM
ஊத்தங்கரை: ஊத்தங்கரை அடுத்த, சாமல்பட்டி இஸ்லாமிய நகரில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. பகுதி மக்களுக்கு குடிநீர், சாலை வசதி, கழிப்பிட கால்வாய் வசதி, தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தரக்கோரி கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், 'இஸ்லாமிய நகர் பஞ்., தேர்தல் நேரத்தில் மட்டுமே கட்சியினருக்கு தெரிகிறது, தேர்தல் முடிந்து விட்டால் எங்கள் பகுதி பக்கம் திரும்பி கூட யாரும் பார்ப்பதில்லை.
இப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு, அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை, கழிப்பிட வசதி ஆகியவற்றை உட-னடியாக மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் செய்து கொடுக்க வேண்டும். அடிப்படை தேவைகள் குறித்து, பஞ்., நிர்-வாகத்திடமும், பி.டி.ஓ., அலுவலகத்திலும், பலமுறை மனு கொடுத்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. மழை காலங்களில், வீடுகளில் மழை நீர் புகுந்து விடுகிறது. கழி-வுநீர் தேங்குவதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. அவ-சர தேவைக்கு, 108 ஆம்புலன்ஸ் கூட இப்பகுதிக்கு வர முடியாத நிலை உள்ளது. சாலையோரம் கொட்டப்படும் குப்பை, கழிவு-களால் துர்நாற்றம் வீசி வருகிறது. பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பொதுமக்கள் சாலையில் சென்று வர மிகவும் சிரமப்படுகின்றனர்.இச்சாலையை கடக்க முடியாமல், பலர் விபத்துக்குள்ளாகி கை, கால் முறிவு ஏற்பட்டுளது. இதுகுறித்து, மாவட்ட கலெக்டர் நேரில் ஆய்வு செய்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றனர்.

