/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பஸ்சிற்கு வழி கொடுக்காமல் சென்ற லாரி டிரைவரை தாக்கிய பயணிகள்
/
பஸ்சிற்கு வழி கொடுக்காமல் சென்ற லாரி டிரைவரை தாக்கிய பயணிகள்
பஸ்சிற்கு வழி கொடுக்காமல் சென்ற லாரி டிரைவரை தாக்கிய பயணிகள்
பஸ்சிற்கு வழி கொடுக்காமல் சென்ற லாரி டிரைவரை தாக்கிய பயணிகள்
ADDED : ஆக 29, 2024 01:33 AM
ஓசூர், ஆக. 29-
கிருஷ்ணகிரியில் இருந்து ஓசூர் நோக்கி நேற்று மாலை தனியார் பஸ் சென்றது. சூளகிரி அருகே கொல்லப்பள்ளியில் இருந்தே, பஸ்சிற்கு வழி கொடுக்காமல், கன்டெய்னர் லாரியை டிரைவர் ஒருவர் ஓட்டி சென்றார். மேலும், பஸ் மீது மோதுவது போல் லாரியை இயக்கினார். சூளகிரி பஸ் ஸ்டாண்ட் எதிரே உள்ள தேசிய நெடுஞ்சாலை மேம்பாலம் மீது சென்றபோது, பஸ்சை நிறுத்தி லாரியை வழிமறித்த பஸ் டிரைவர் மற்றும் பயணிகள் சிலர், லாரி டிரைவரிடம் தகராறு செய்தனர்.
அத்துடன் லாரி டிரைவரை சாலையிலேயே சரமாரியாக தாக்கினர். இக்காட்சிகள் வைரலானது. சூளகிரி போலீசார், லாரி டிரைவரை மீட்டனர். அவர் போதையில் இருந்ததாக பயணிகள் குற்றம் சாட்டினர். லாரி மற்றும் பஸ்சை சூளகிரி போலீசார் பறிமுதல் செய்து, விசாரித்து
வருகின்றனர்.