/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில் தன்னார்வலர்களுக்கு பயிற்சி வகுப்பு

ADDED : ஆக 01, 2024 01:46 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், பள்ளிசாரா மற்றும் வயதுவந்தோர் கல்வி இயக்கம் சார்பில், புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தில், தன்னார்வலர்களுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில், அந்தந்த ஒன்றியங்களிலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் நடுநிலைப்பள்ளி மூலம் தேர்வு செய்யப்பட்ட, 70 தன்னார்வலர்கள் கலந்து கொண்-டனர். இவர்களுக்கு, எண்கள் அறிவோம், இயற்கையோடு இணைவோம், 1, 10, 100 இடமதிப்பு, பெருக்கல், வகுத்தல், கடிகாரம் பார்த்து நேரம் கூறுதல், நாள்காட்டி, ஆங்கில மாதங்கள், அஞ்சலகத்தில் பணம் போடும் படிவம், சாதனை பெண்கள் படவிளக்க காட்சி, துாய்மை பாரதம், கிராம சபை, பீம் செயலி போன்றவை குறித்து பயிற்சிகள் அளிக்கப்பட்டன.
ஆசிரியர் பயிற்றுனர்கள் ராஜேந்திரன், தமிழ் தென்றல், திவ்யா ஆகியோர் இப்பயிற்சியை அளித்தனர். பயிற்சி பெற்ற தன்னார்வ-லர்கள், அந்தந்த பகுதியில் அடிப்படை கல்வி இல்லாத, 15 வயது முதல் முதியவர்கள் வரை உள்ளவர்களுக்கு, அடிப்படை கல்வியை கற்பிக்க உள்ளனர். இதேபோல், நேற்று மாவட்டத்தி-லுள்ள, 10 ஒன்றியங்களிலும் பயிற்சி வகுப்பு நடந்தது.