ADDED : ஜன 10, 2025 01:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிமென்ட் சாலைஅமைக்க பூஜை
கிருஷ்ணகிரி, : கெலமங்கலம் ஒன்றியம் இருதுக்கோட்டை பஞ்.,க்கு உட்பட்ட பேலாளம் கிராமத்தில் சிமென்ட் சாலை அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, நேற்று ஒன்றிய பொதுநிதியிலிருந்து, 6 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது. அதேபோல் மனம்பாடி கிராமத்தில், ஆழ்துளை கிணறு பைப் லைன் அமைக்க, 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பணிக்கும் பூமி பூஜை நடந்தது. அ.தி.மு.க., கெலமங்கலம் மேற்கு ஒன்றிய செயலாளர் ஜெயபால் பூமிபூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தார்.

