ADDED : ஏப் 10, 2025 01:52 AM
போதை பொருட்கள் ஒழிப்பு பேரணி
ஓசூர்:ஓசூர், கோட்ட மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை சார்பில், போதை பொருட்கள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நேற்று நடந்தது. ஓசூர் கோட்ட ஆய அலுவலர் பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.
ஓசூர் சப்கலெக்டர் பிரியங்கா, மாவட்ட ஆயத்தீர்வை துறை உதவி கமிஷனர் பழனி, மதுவிலக்கு டி.எஸ்.பி., மகாலட்சுமி, மீரா மருத்துவமனை நிர்வாக இயக்குனர் அம்பிகா பாரி ஆகியோர், மாணவ, மாணவியருக்கு போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்தும், மொபைல்போன் ஆப் மூலமாக, போதை பொருட்கள் விற்பனை பற்றியும் புகார் செய்வது பற்றியும் விளக்கமளித்தனர்.
ஓசூர், காமராஜ் காலனி கே.ஏ.பி., திருமண மண்டபம் முன் துவங்கிய பேரணி, தாலுகா அலுவலக சாலை, பழைய தொலைபேசி அலுவலக சாலை, தேன்கனிக்கோட்டை சாலை வழியாக சென்று, சப்கலெக்டர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது. பேரணியில் பங்கேற்ற செயின்ட் பீட்டர்ஸ் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை மாணவ, மாணவியர், போதை பொருட்களுக்கு எதிரான பதாகைகளை கையில் ஏந்தி
சென்றனர்.

