/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அஞ்செட்டியில் முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு
/
அஞ்செட்டியில் முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு
ADDED : நவ 12, 2025 01:18 AM
ஓசூர், அஞ்செட்டியில், முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி, நேற்று முன்தினம் துவங்கி நடந்து வருகிறது.
நாடு முழுவதும் வரும், 2027ம் ஆண்டு, முதல் முறையாக டிஜிட்டல் முறையில், மக்கள் தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. அதற்காக, தமிழகத்தில் திருவள்ளூர் மாவட்டத்தில் ஆர்.கே.,பேட்டை, காஞ்சிபுரத்தில் மாங்காடு, கிருஷ்ணகிரி மாவட்டத்தில், அஞ்செட்டி தாலுகாவில், முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
அஞ்செட்டி தாலுகாவில் மொத்தமுள்ள, 197 கிராமங்களில், தேசிய மக்கள்தொகை கணக்கெ
டுப்பு அலுவலக முகமை மேற்பார்வையில், முன்சோதனை மக்கள்தொகை கணக்கெடுப்பு நேற்று முன்தினம் துவங்கியது. அஞ்செட்டி தாசில்தார் செந்தில்குமார் முன்னிலையில், முதற்கட்டமாக வரும், 15ம் தேதி வரை, கிராமங்களில் உள்ள வீட்டுப்பட்டியல் மற்றும் வீடுகள் கணக்கெடுப்பு பணி நடக்கிறது. அதன் பின், 30ம் தேதி வரை, வீடுகள் தோறும் மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.இப்பணிகளில், ஆசிரியர்கள், வருவாய்த்துறையினர், அங்கன்வாடி ஊழியர்கள், பஞ்., செயலர்கள் ஈடுபட்டுள்ளனர். அதாவது, 17 மேற்பார்வையாளர்களுடன், 86 கணக்கெடுப்பாளர்கள் இப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். 2027ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது எதிர்நோக்கும் சவால்களை, முன்சோதனை கணக்கெடுப்பில் கண்டறிந்து, அதை நிவர்த்தி செய்யவே, முன்சோதனை கணக்கெடுப்பு நடத்தப்படுவதாக, அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

