/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வாக்காளர் சிறப்பு திருத்த முறையை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
/
வாக்காளர் சிறப்பு திருத்த முறையை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்காளர் சிறப்பு திருத்த முறையை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
வாக்காளர் சிறப்பு திருத்த முறையை எதிர்த்து தி.மு.க., கூட்டணி கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 12, 2025 01:18 AM
கிருஷ்ணகிரி, வாக்காளர் சிறப்பு திருத்த முறையை கண்டித்து, தி.மு.க., கூட்டணி கட்சிகள் சார்பில் நேற்று, கிருஷ்ணகிரியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது-. கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கிழக்கு மாவட்ட, தி.மு.க. செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ. தலைமை வகித்தார். மேற்கு மாவட்ட, தி.மு.க., செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., முன்னிலை வகித்தார். இதில், கிருஷ்ணகிரி, காங்., - எம்.பி., கோபிநாத், தளி, இ.கம்யூ., - எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், ஓசூர் மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் பேசினர்.
ஆர்ப்பாட்டத்தில் எம்.எல்.ஏ.,க்கள் மதியழகன், பிரகாஷ் பேசியதாவது: தமிழகத்தில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் சீராய்வை, இந்திய தேர்தல் ஆணையம் கொண்டு வந்தள்ளது. சிறுபான்மையின வாக்குகள், பா.ஜ., எதிர்ப்பு வாக்குகளை குறி வைத்து நீக்கும் நோக்கத்துடன் வாக்காளர் பட்டியல் சீராய்வு நடக்கிறது. இதற்கு தேர்தல் ஆணையமும், துணை நிற்கிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே, தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளை, தேர்தல் ஆணையம் கைவிட வேண்டும். இவ்வாறு, அவர்கள் பேசினர்.
முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் செங்குட்டுவன், முருகன், மாநில பகுத்தறிவு இலக்கிய அணி துணை செயலாளர் மாதேஸ்வரன், வர்த்தக அணி மாநில துணை செயலாளர் சீனிவாசன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் தினேஷ்ராஜன், மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் கூட்டணி கட்சியினர் கலந்து கொண்டனர்.

