/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
சுகாதார ஆய்வாளரை தாக்கிய 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கைது
/
சுகாதார ஆய்வாளரை தாக்கிய 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கைது
சுகாதார ஆய்வாளரை தாக்கிய 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கைது
சுகாதார ஆய்வாளரை தாக்கிய 2 ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் கைது
ADDED : ஆக 29, 2024 01:31 AM
கிருஷ்ணகிரி, ஆக. 29-
கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் அருகே ஒரப்பத்திலுள்ள, ஆரம்ப சுகாதார நிலைய, சுகாதார ஆய்வாளர் சரவணகுமார், 29; கடந்த, 26 இரவு, ஒரப்பத்தை சேர்ந்த, ஓட்டல் ஊழியர் கார்த்திகேயன், 26, என்பவர், அவரது, 3 வயது குழந்தையை சிகிச்சைக்காக அழைத்து வந்தார். அப்போது பணியில் செவிலியர் மாலினி இருந்துள்ளார். கார்த்திகேயனுடன் எலத்தகிரியை சேர்ந்த கார்த்திக், 38, ஒரப்பம் அருண்குமார், 33 உள்ளிட்டோரும் வந்துள்ளனர். இருவரும் ராணுவத்தில் பணிபுரிந்து வருகின்றனர். அவர்கள், 'ஏன் டாக்டர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் இல்லை' எனக்கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது, சுகாதார ஆய்வாளர் சரவணகுமாரை, மூவரும் சேர்ந்து கடுமையாக தாக்கியதில், அவரது பல் உடைந்தது. தடுக்க வந்த, செவிலியர் மாலினியையும் தாக்கினர். படுகாயமடைந்த சரவணகுமார், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அவர் புகார் படி, கந்திகுப்பம் போலீசார், சரவண குமாரை தாக்கிய, மூவரையும் கைது செய்தனர்.