/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரேஷன் அரிசி வாங்கிய 5 மாவு மில் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு
/
ரேஷன் அரிசி வாங்கிய 5 மாவு மில் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு
ரேஷன் அரிசி வாங்கிய 5 மாவு மில் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு
ரேஷன் அரிசி வாங்கிய 5 மாவு மில் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூலை 03, 2024 07:54 AM
கிருஷ்ணகிரி, : காவேரிப்பட்டணத்திலுள்ள மாவு மில்களில், நிப்பட் கம்பெனிக-ளுக்காக ரேஷன் அரிசியை சட்ட விரோதமாக வாங்கி அரைத்து கொடுப்பதாக, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் ஐ.ஜி., ஜோஷி நிர்மல்குமாருக்கு புகார் சென்றது.
இது குறித்து விசாரிக்க அவர், கோவை மண்டல உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.பி., சந்திரசேகரனுக்கு உத்தரவிட்டார். அதன்-படி, சேலம் டி.எஸ்.பி., விஜயகுமார் தலைமையில் இன்ஸ்-பெக்டர் சங்கீதா, எஸ்.ஐ.,க்கள் பெரியசாமி, அருள்பிரகாஷ், பெருமாள் மற்றும் போலீசார், காவேரிப்பட்டணத்தில் உள்ள, 15 மாவு மில்களில் சோதனை நடத்தினர்.இதில், ரேஷன் அரிசியை வாங்கி, நிப்பட் கம்பெனிகளுக்கு அனுப்ப முயன்ற காவேரிப்பட்டணத்தை சேர்ந்த, மாவு மில் உரி-மையாளர்கள் பாஸ்கர், முருகேசன், சீனிவாசன், பாஸ்கி, ராஜ்க-வுண்டர் ஆகிய, 5 பேர் மீது வழக்குப்பதிந்துள்ளனர்.