/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
கேரளா லாரி டிரைவர் படுகொலையை கண்டித்து கிருஷ்ணகிரியில் ஆர்ப்பாட்டம்

ADDED : ஆக 10, 2024 07:24 AM
கிருஷ்ணகிரி: கேரளா மாநிலம் எர்ணாகுளம் அருகே உள்ள நடுமசேரி கிரா-மத்தைச் சேர்ந்தவர் எலியாஸ், 43; லாரி டிரைவர். இவர் கடந்த ஜூலை 29ல், சென்னை ஸ்ரீபெரும்புதுாரில் இருந்து கன்டெய்னர் லாரியில் எலக்ட்ரானிக் பொருட்களை ஏற்றிக் கொண்டு, கிருஷ்-ணகிரி அடுத்த சுபேதார் மேடு அருகே வந்த போது எலியாஸ் டீ குடிக்க லாரியை நிறுத்தியுள்ளார். அப்போது, டூவீலரில் வந்த, 2 பேர் எலியாசை இரும்பு ராடால் தாக்கி கத்தியால் குத்தினர். இதில் எலியாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார். எலியாசை கொலை செய்தவர்களை கைது செய்யக்கோரி, கிருஷ்ணகிரி புது பஸ் ஸ்டாண்டு அருகில், சமூகநீதி அனைத்து வாகன ஓட்டு-னர்கள் தொழிற் சங்கம் சார்பில் நேற்று மாலை கண்டன ஆர்ப்-பாட்டம் நடந்தது.
மாநிலத் தலைவர் பத்மராஜ் தலைமை வகித்தார். மாவட்டத் தலைவர் பன்னீர்செல்வம், நகர தலைவர் கார்த்திக், மாவட்ட பொருளாளர் ராமமூர்த்தி, மாநில கவுரவத் தலைவர் ராஜா, பொதுச் செயலாளர் விஸ்வராஜ், மாவட்ட ஒருங்-கிணைப்பாளர் சிலம்பரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ஆர்ப்பாட்டத்தில், கேரளா லாரி டிரைவர் எலியாசை கொலை செய்தவர்களை உடனே கைது செய்ய வேண்டும் என வலியு-றுத்தி கண்டன கோஷம் எழுப்பினர்.