/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பர்கூர், தளியில் இன்று தி.மு.க., பொதுக்கூட்டம்
/
பர்கூர், தளியில் இன்று தி.மு.க., பொதுக்கூட்டம்
ADDED : மார் 12, 2025 07:58 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி, தி.மு.க., கிழக்கு மாவட்ட செயலாளர் மதியழகன் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
லோக்சபா தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில், தமிழ்நாடு அரசியல் பிரநிதித்துவத்தை குறைக்கும் மத்திய அரசுக்கு, முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அனைத்து கட்சி கூட்டத்தில் கண்டனம் தெரி-விக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, தி.மு.க., சார்பில் இன்று, 'தமிழ்நாடு போராடும், தமிழ்நாடு வெல்லும்' என்ற தலைப்பில், மத்திய அரசுக்கு எதிராக கண்டன பொதுக்கூட்டங்கள் நடக்கிறது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க., சார்பில் பர்கூரில் இன்று மாலை, 5:00 மணிக்கு பொதுக்கூட்டம் நடக்கிறது. இதில், தி.மு.க., அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பேசுகிறார். தலைமை கழக பேச்சாளர்கள் வக்கீல் சூர்யா வெற்றிகொண்டான், பவானி கண்ணன், பேரணாம்பட்டு ராஜேந்திரபிரசாத் ஆகி-யோரும் கலந்து கொள்கின்றனர்.இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
* கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட செயலாளர் பிரகாஷ் எம்.எல்.ஏ., வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட, தி.மு.க., சார்பில், கண்டன பொதுக்கூட்டம் இன்று மாலை, 4:00 மணிக்கு, தளி பஸ் ஸ்டாண்ட் முன் நடக்கிறது. இதில், கட்சியின் தேர்தல் பணிக்குழு செயலாளர் கம்பம் செல்வேந்திரன், தலைமை கழக பேச்சாளர்கள் வைத்தியலிங்கம், ஆவடி கா.மு.ஜான் பேசுகின்றனர்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.