/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
4 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுது போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
/
4 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுது போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
4 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுது போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
4 நாட்களாக டிரான்ஸ்பார்மர் பழுது போராட்டம் நடத்த மக்கள் முயற்சி
ADDED : பிப் 25, 2025 06:46 AM
ஓசூர்: தேன்கனிக்கோட்டை அருகே, இருதுக்கோட்டை பஞ்., உட்பட்ட பேலாளம் கிராமத்தில், இரு டிரான்ஸ்பார்மர்கள் உள்ளன. கடந்த, 4 நாட்களுக்கு முன், ஒரு டிரான்ஸ்பார்மரில் உள்ள அலுமினிய கம்பிகள் மற்றும் காப்பர் எரிந்தது. அதனால் அப்பகுதியில் மின்-தடை ஏற்பட்டது. அதனால், விவசாய மோட்டார்களை இயக்க முடியாத நிலை உரு-வாகி உள்ளது. தற்காலிகமாக வேறொரு டிரான்ஸ்பார்மர் மூல-மாக மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஒரே டிரான்ஸ்பார்மரில் இருந்து அதிகளவு மின் இணைப்பிற்கு மின்-சாரம் செல்வதால், அடிக்கடி குறைந்த மின் அழுத்தம் ஏற்பட்டு மின்தடை ஏற்படுகிறது. மின்மோட்டார்களை இயக்க முடியாமல், விவசாயிகள் அவதியடைந்து வருகின்றனர்.
வெயிலுக்கு பயிர்கள் காய்ந்து வருகின்றன. அப்பகுதிக்கு குடிநீர் வினியோகம் பாதிக்கப் பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள குளம், குட்டைகளில் இருந்து மக்கள் தண்ணீர் எடுத்து வந்து பயன்ப-டுத்தி வருகின்றனர். 6 மாதத்திற்கு ஒருமுறை டிரான்ஸ்பார்மரில் பழுது ஏற்படுவதால், அதை சரிசெய்ய, அப்பகுதி மக்கள் தலா, 500 ரூபாய் வசூல் செய்து, 40,000 ரூபாய் வரை மின்வாரியத்திற்கு வழங்குவதாக குற்றம்சாட்டி உள்ளனர். டிரான்ஸ்பார்மர் நேற்று வரை, சரி செய்யப்படாததால், ஒப்பாரி வைத்து போராட்டம் நடத்த மக்கள் திரண்டனர். தகவலறிந்த மின்வாரிய அதிகாரிகள், இன்று (பிப்.25) டிரான்ஸ்-பார்மர் பழுது சரி செய்யப்பட்டு, சீரான மின் வினியோகம் செய்யப்படும் என உறுதியளித்தனர். அதனால் மக்கள் கலைந்து சென்றனர்.

