/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ரயில் வழித்தடம் அருகே தடுப்பு மேம்பாலம் அமைக்க கோரி மனு
/
ரயில் வழித்தடம் அருகே தடுப்பு மேம்பாலம் அமைக்க கோரி மனு
ரயில் வழித்தடம் அருகே தடுப்பு மேம்பாலம் அமைக்க கோரி மனு
ரயில் வழித்தடம் அருகே தடுப்பு மேம்பாலம் அமைக்க கோரி மனு
ADDED : ஆக 20, 2024 02:41 AM
கிருஷ்ணகிரி: ஊத்தங்கரை அடுத்த கே.எட்டிபட்டி பகுதியை சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் நேற்று கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் பஞ்., சுற்றி, 18க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த, 10,000க்கும் மேற்பட் டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் ஜோலார்பேட்டை சேலம் இரட்டை ரயில்பாதை உள்ளது. இந்த பாதையை கடந்து மக்கள் நடந்தும், அருகிலுள்ள சுரங்கப்பாதை வழியாக வாகனங்களிலும் சென்றும் வந்தனர். ஆனால் இப்போது ரயில் வழித்தடத்தையொட்டி இரும்பு கம்பிகள் வைத்து மூன்றடிக்கு மதில் சுவர் போல் அமைத்து வருகின்றனர்.
இதனால், கீழ்எட்டிப்பட்டி, கதிரம்பட்டி, குமாரம்பட்டி, குன்னத்துார் மக்கள், ஒரு கி.மீ., துாரத்தில் செல்லும் இடத்திற்கு, 10 கி.மீ., சுற்றி செல்கின்றனர். கீழ் எட்டிப்பட்டி கதிரம்பட்டி மக்கள் கே.எட்டிப்பட்டி ரேஷன் கடைக்கு செல்ல முடியவில்லை. எனவே, இப்பகுதியில் மேம்பாலம் அமைக்க வேண்டும். அதுவரை மக்கள் பயன்படுத்தி வந்த சுரங்கப்பாதை வழியாக வாகனங்கள் செல்ல அனுமதிக்க வேண்டும்.இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளனர்.

