/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
1.8 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது
/
1.8 டன் ரேஷன் அரிசி கடத்த முயன்ற இருவர் கைது
ADDED : ஆக 10, 2024 07:19 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு எஸ்.ஐ.,க்கள் பெருமாள், பெரியசாமி தலைமையிலான தனிப்படையினர் ஓசூர், ஜூஜூவாடி ஜங்ஷன் அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அவ்வழியாக வந்த காரை நிறுத்தி சோதனையிட்டதில், 50 கிலோ எடையுள்ள, 21 மூட்டைகளில், 1,050 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. காரை ஓட்டி வந்த ஓசூர், மூக்கண்டப்பள்ளி, பாரதி நகரை சேர்ந்த மணிகண்டன், 36, கைது செய்யப்பட்டார்.
அதே போல எஸ்.ஐ.,க்கள் அருள்பிரகாஷ், பெரியசாமி வாடமங்கலம் - காவேரிப்பட்டணம் சாலை பனந்தோப்பு கொட்டாய் பஸ் ஸ்டாப் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஆட்டோவை நிறுத்தி சோதனையிட்டதில், 16 மூட்டைகளில், 800 கிலோ ரேஷன் அரிசி கடத்த முயன்றது தெரிந்தது. போச்சம்பள்ளி அடுத்த பனந்தோப்பு கொட்டாயை சேர்ந்த விஜயேந்திரன்,36, என்பவரை கைது செய்தனர்.