/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
/
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
ADDED : ஏப் 09, 2025 01:33 AM
வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள்உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்
கிருஷ்ணகிரி:வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை வழங்கும் திட்டத்தில் பயன்பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் பதிவு செய்து, 5 ஆண்டுகள் தொடர்ந்து புதுப்பித்தும் எவ்வித வேலைவாய்ப்பும் கிடைக்காத படித்த இளைஞர்களுக்கு, மாதந்தோறும் தமிழக அரசால் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி, 10ம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள், பிளஸ் 2, கல்லுாரி படிப்பு
முடித்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கும், 300 ரூபாய் முதல், 1,000 ரூபாய் வரை வழங்கப்படுகிறது. உதவித்தொகை பெறுவதற்கான விதிமுறைகள், வயது வரம்பு, விண்ணப்பம் உள்ளிட்டவை, www.tnvelaivaaippu.gov.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். உரிய சான்றுகளுடன் தங்கள் விண்ணப்பங்களை அடுத்த மாதம் மே, 31க்குள் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மைய அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்கலாம். ஏற்கனவே உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பின், சுய உறுதிமொழி ஆவணம் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.