/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒற்றை யானை அட்டகாசம் வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை
/
ஒற்றை யானை அட்டகாசம் வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை
ஒற்றை யானை அட்டகாசம் வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை
ஒற்றை யானை அட்டகாசம் வனப்பகுதிக்கு விரட்ட கோரிக்கை
ADDED : ஆக 08, 2024 05:41 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனஹள்ளி அருகே உள்ள நேரல-கிரி வனப்பகுதியில், கடந்த, 3 மாதங்களாக கர்நாடகா மாநிலத்தி-லிருந்து வந்த ஒற்றை யானை முகாமிட்டிருந்தது. இந்த யானை அடிக்கடி தமிழகம் மற்றும் கர்நாடகா மாநில வனப்பகுதிகளில் விவசாயப் பயிர்களை நாசம் செய்து வந்தது. கடந்த, 2 நாட்க-ளுக்கு முன்பு, கர்நாடகா மாநிலம் செத்தகுட்லப்பள்ளி கிரா-மத்தில், ஆடு மேய்த்த மூதாட்டியை யானை தாக்கிக் கொன்றது.
கடந்த ஒரு வாரத்திற்கு முன், ராயக்கோட்டை வனப்பகுதியில் இருந்து குருபரப்பள்ளி அடுத்த மேலுமலை வனப்பகுதிக்கு வந்த ஒற்றை யானை, வனப்பகுதியில் இருந்து வெளியேறி அட்ட-காசம் செய்து வந்தது. கடந்த வாரம் வனப்பகுதிக்கு சென்ற வனத்துறை மற்றும் மின் ஊழியர்களை தாக்கியதில், இருவரும் படுகாயம் அடைந்தனர். நேற்று முன்தினம் இந்த யானை குருப-ரப்பள்ளி அருகே, மார்க்கண்டேயன் நதியில், நாள் முழுவதும் முகாமிட்டு அப்பகுதியில் சுற்றித்திரிந்தது. அதை வனத்துறை-யினர் மீண்டும் மேலுமலை வனப்பகுதிக்கு விரட்டினர். இந்த ஒற்றை யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட பொது-மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
* அஞ்செட்டி அருகே தொட்டமஞ்சி சாலையில் உள்ள கொண்டை ஊசி வளைவில், நேற்று காலை ஒற்றை யானை உலா வந்தது. அவ்வழியாக வந்த வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்து, சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தி விட்டு பதற்றத்-துடன் காத்திருந்தனர். அஞ்செட்டி வனத்துறையினர் வந்து, பட்-டாசுகளை வெடித்து யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்-டினர். அதன் பின் வாகன போக்குவரத்து சீரானது.