/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ஒற்றுமையுடன் செயல்படுங்கள்: முனுசாமி
/
உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ஒற்றுமையுடன் செயல்படுங்கள்: முனுசாமி
உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ஒற்றுமையுடன் செயல்படுங்கள்: முனுசாமி
உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் ஒற்றுமையுடன் செயல்படுங்கள்: முனுசாமி
ADDED : ஆக 22, 2024 01:19 AM
உங்கள் பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன்
ஒற்றுமையுடன் செயல்படுங்கள்: முனுசாமி
கிருஷ்ணகிரி, ஆக. 22-
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, அ.தி.மு.க., அலுவலகத்தில், உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் காத்த வராயன் தலைமை வகித்தார்.
எம்.எல்.ஏ.,க்கள் அசோக்குமார், தமிழ்செல்வம் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் கேசவன் வரவேற்றார். அ.தி.மு.க., துணை பொதுச்செயலாளரும், வேப்பனஹள்ளி
எம்.எல்.ஏ.,வுமான முனுசாமி, ஒன்றிய செயலாளர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்கி பேசியதாவது:
எம்.ஜி.ஆரை தொடர்ந்து, நம் கட்சியை காப்பாற்றி வழி நடத்தியவர் ஜெயலலிதா. அவர் வழியில் இன்று, நம் பொதுச் செயலாளர் பழனிசாமி, கட்சியை காப்பாற்றி வருகிறார். அ.தி.மு.க., ஒரு குடும்பம் போன்றது. கட்சி தொண்டர்களால் தான் அதன் தலைவருக்கு மரியாதை. யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதை நிறைவேற்ற நான் தயாராக இருக்கிறேன்.
தற்போது, கட்சி சோதனை யில் உள்ளது. அதை காப்பாற்ற, நாம் ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும். நம்மை பற்றி தெரியாமல், பலர் விமர்சிக்கின்றனர். அவர்களுக்கு தெரிய வைக்க நாம் ஒன்றுமையுடன் செயல்பட வேண்டும். கடந்த, 50 ஆண்டு களாக எந்த பதவியிலும் இல்லையென்றாலும், கரை வேட்டியை
கட்டிக்கொண்டு, என் கட்சி தான் பெரியது என்பவர் தான்
அ.தி.மு.க., தொண்டர்.
அவ்வளவு பாரம்பரியம் கொண்ட, மனித நேயம் மிக்கது நம் கட்சி. உங்களின் பாதம் தொட்டு கேட்டுக் கொள்கிறேன், நாம் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால், வரும், 2026ல் பழனிசாமியை முதல்வராக்கலாம். உங்களோடு நான் இருக்கிறேன். எங்களோடு நீங்கள் இருங்கள்.
இவ்வாறு, அவர் பேசினார்.
அப்போது, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் முனிவெங்கடப்பன், மனோரஞ்சிதம் நாகராஜ், முன்னாள் மாவட்ட செயலாளர் தென்னரசு, ஒன்றிய செயலாளர்கள் சோக்காடி ராஜன், பையூர் ரவி, சைலேஷ் கிருஷ்ணன், மாவட்ட கவுன்சிலர் ஜெயா ஆஜி உள்பட பலர் பங்கேற்றனர்.