/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
/
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி
ADDED : ஆக 23, 2024 02:00 AM
ஓசூர், ஆக. 23-
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டாரம், பிள்ளைக்கொத்துாரில், அட்மா திட்டத்தில் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை குறித்து விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. வேளாண் உதவி இயக்குனர் ஜான் லுார்து சேவியர் தலைமை வகித்தார். வேளாண் துணை இயக்குனர் பாலசுப்பிரமணியம், வேளாண் அலுவலர் ஸ்ருதி, தோட்டக்கலை உதவி இயக்குனர் சிவசங்கரி, மற்றும் பட்டு வளர்ச்சித்துறை, தொழில்நுட்ப உதவியாளர்கள் கலந்து கொண்டனர்.
இதில், விவசாயிகளுக்கு தனிப்பயிர், கலப்பு பயிர் சாகுபடி, உற்பத்தியை அதிகரிக்கும் தொழில்நுட்பங்கள் மற்றும் கால்நடை வளர்ப்பு குறித்து விளக்கி பேசினர். பயிற்சி ஏற்பாடுகளை உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் முஹம்மது ரபி மற்றும் பழனிசாமி செய்திருந்தனர்.