/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
பாரதி இளங்கவிஞர் விருது கவிதை போட்டி பங்கேற்க மாணவ, மாணவியருக்கு அழைப்பு

ADDED : ஆக 19, 2024 12:32 AM
கிருஷ்ணகிரி: பாரதி இளங்கவிஞர் விருதுக்கான கவிதை போட்டியில், கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலை மற்றும் அறி-வியல் கல்லுாரி முதல்வர் கீதா வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ் வளர்ச்சி இயக்குனரால் வகுக்கப்பட்ட வழிமுறைகளை பின்-பற்றி, கல்லுாரி மாணவி, மாணவியருக்கு, மாநில அளவில் கவிதை போட்டி நடத்தி, பாரதி இளங்கவிஞர் விருது மற்றும் மாநில அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு தலா, ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட உள்ளது.
அதன்படி, கிருஷ்ணகிரி மாவட்ட அளவிலுள்ள அரசு, அரசு உதவிபெறும் சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கல்வியியல் கல்லுாரி, பொறியியல் கல்லுாரி மற்றும் பல்வகை தொழில்நுட்பக் கல்லுாரி-களில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு இடையே மாவட்ட அளவிலான மகாகவி பாரதியார் பற்றிய கவிதைப்போட்டி இன்று (ஆக.19) காலை, 11:00 மணிக்கு, கிருஷ்ணகிரி அரசு மகளிர் கலைக் கல்லுாரியில் நடக்க உள்ளது. எனவே இம்மாவட்டத்-திற்கு உட்பட்ட கல்லுாரி மாணவ, மாணவியர் (ஒரு கல்லுாரிக்கு ஒருவர்) இப்போட்டியில் கலந்து கொள்ளலாம். மேலும், கவி-தையின் தலைப்பு போட்டி நடக்கும் நாளில் நடுவர்கள் முன்னி-லையில் அறிவிக்கப்படும். இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.