/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
ஓசூர் மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி கூட்டத்தால் மேயர் அதிர்ச்சி
/
ஓசூர் மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி கூட்டத்தால் மேயர் அதிர்ச்சி
ஓசூர் மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி கூட்டத்தால் மேயர் அதிர்ச்சி
ஓசூர் மாமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க., வெளிநடப்பு தி.மு.க., கவுன்சிலர்கள் போட்டி கூட்டத்தால் மேயர் அதிர்ச்சி
ADDED : ஆக 01, 2024 01:36 AM
ஓசூர்: ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டத்தில் இருந்து, அ.தி.மு.க., வெளிநடப்பு செய்த நிலையில், தி.மு.க., கவுன்சி-லர்கள் கூட்டத்தை புறக்கணித்து, மேயருக்கு எதிராக போட்டி கூட்டம் நடத்தி தீர்மானம் நிறைவேற்றி மனுவாக கொடுத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் கூட்டம், நேற்று காலை நடந்தது. தி.மு.க.,வை சேர்ந்த மேயர் சத்யா தலைமை வகித்தார். துணை கமிஷனர் டிட்டோ முன்-னிலை வகித்தார். மாநகராட்சியில் மொத்தமுள்ள, 45 கவுன்சிலர்-களில், நேற்றைய கூட்டத்தில், அ.தி.மு.க., 13, பா.ஜ., - காங்., தலா ஒன்று, 2 சுயேச்சைகள் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள், 5 பேர் என மொத்தம், 22 கவுன்சிலர்கள் மட்டுமே பங்கேற்றனர்.
கூட்டத்தில், அ.தி.மு.க., கவுன்சிலர்கள் ஜெயப்பிரகாஷ், குபேரன் ஆகியோர் பேசுகையில், 'அ.தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ள, 16 வார்டுகளில் சாலை, தெருவிளக்கு போன்ற அடிப்-படை வசதிகள் மற்றும் வளர்ச்சி பணிகள் ஏதும், இதுவரை உள்-ளாட்சி அமைப்புகள் பொறுப்பேற்றும் செய்யவில்லை. தெரு-நாய்கள் பிடிக்கப்படவில்லை. நிலைக்குழுக்கள், மண்டல தலை-வர்களுக்கு அலுவலகம் இல்லை. அவர்களுக்கு என்ன அதிகாரம் என்பதே தெரியவில்லை. நிலைக்குழு கூட்டங்கள் முறையாக நடப்பதில்லை' என்றனர்.
மேலும், வார்டுகள் புறக்கணிக்கப்படுவதை கண்டித்து, வெளிந-டப்பு செய்வதாகவும், தொடர்ந்து புறக்கணித்தால், மாநகராட்சி அலுவலகத்தில் சாகும் வரை உண்ணாவிரத பேராாட்டத்தில் ஈடுபடுவோம் எனக்கூறி, அ.தி.மு.க.,வின், 13 கவுன்சிலர்களும் வெளியேறினர்.
தொடர்ந்து பேசிய மேயர் சத்யா, ''எந்த வார்டுகளையும் புறக்க-ணிப்பதில்லை. பாதாள சாக்கடை திட்டம் வர உள்ளதால், சாலைகள் அமைக்கப்படாமல் உள்ளது,'' என்றார்.
அ.தி.மு.க., கவுன்சிலர்கள் வெளியேறியவுடன், கூட்டத்தில் பங்-கேற்ற கவுன்சிலர்கள் எண்ணிக்கை, 9 ஆக குறைந்தது. இருந்தும், 30 கோடி ரூபாய்க்கு மேலான வளர்ச்சி பணிகள் அடங்கிய அனைத்து தீர்மானங்களும் நிறைவேற்றப்பட்டதாக கூறி கூட்டத்தை, மேயர் முடித்து வைத்தார்.
போட்டி கூட்டம்
இதற்கிடையே, மாமன்ற கூட்டத்தை புறக்கணித்த, தி.மு.க., கவுன்சிலர்கள், மேயர் சத்யாவிற்கு எதிராக, தி.மு.க.,வை சேர்ந்த துணை மேயர் ஆனந்தய்யா தலைமையில், பாகலுார் சாலையி-லுள்ள தனியார் ஓட்டலில் போட்டி கூட்டம் நடத்தினர். இதில், தி.மு.க., கவுன்சிலர்கள், 14 பேர், பா.ம.க., கவுன்சிலர் ஒருவர், 3 சுயேச்சைகள் என மொத்தம், 18 பேர் பங்கேற்றனர். இதில் இன்று (நேற்று) நடந்த கூட்டத்தை ஒத்தி வைக்க வேண்டும். புதிய கமிஷனர் பதவியேற்ற பின்னர் தான் கூட்டத்தை நடத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றி, அதை மனுவாக எழுதி, 18 கவுன்சிலர்களும் கையெழுத்திட்டு, மேயர் சத்யாவிடம் கொடுத்தனர்.
மேயர் பேச்சுவார்த்தை அதை பெற்ற மேயர் சத்யா அதிர்ச்சியடைந்து, துணை மேயர் ஆனந்தய்யா, பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், வரி விதிப்பு குழு தலைவர் சென்னீரப்பா உட்பட, 20 க்கும் மேற்-பட்ட கவுன்சிலர்களிடம், தன் அறையில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கவுன்சிலர்கள் கூட்டத்தில் நிறைவேறிய தீர்மானங்களை நிறுத்தி வைக்க வேண்டும். புதிய கமிஷனர் வந்த பின் தீர்மானங்களை விளக்கி கூறிய பின் தான், நிறைவேற்ற வேண்டும். நிர்வாக முறைகேடு, நகரின் வளர்ச்சி பாதிப்பு, அதிகாரிகள் மெத்தன போக்கு, கவுன்சி-லர்களிடம் அதிகாரிகள் காட்டும் அலட்சிய போக்கு ஆகிய-வற்றை விவாதித்த பின் தான், கவுன்சிலர்கள் கூட்டத்தை நடத்த வலியுறுத்தினர். பரிசீலனை செய்வதாக கூறிய மேயர், கவுன்சிலர்-களை அனுப்பி வைத்தார்.
அதிருப்தி வெளிப்படை
கோவை, திருநெல்வேலி, காஞ்சிபுரத்தை தொடர்ந்து, ஓசூர் மேயர் சத்யா மீது, தி.மு.க., கவுன்சிலர்களே அதிருப்தியில் உள்-ளது, நேற்றைய கூட்டத்தில் வெளிப்படையாக தெரிந்தது. இது, தி.மு.க., தலைமையை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஓசூர் மாந-கராட்சியில் மொத்தமுள்ள, 21 தி.மு.க., கவுன்சிலர்களில், 14 பேர் போட்டி கூட்டத்தில்
பங்கேற்றது குறிப்பிடத்தக்கது
கணவர் அங்கே; கவுன்சிலர் இங்கே
மேயருக்கு எதிராக நடந்த போட்டி கூட்டத்தில், 35 வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் தேவியின் கணவர் மாதேஷ் மற்றும் மேயர் தலைமையிலான மாநகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் தேவியும் பங்கேற்றார். துணை மேயர் தலைமையில், மேயரிடம் மனு கொடுக்க வந்தபோது, கணவர் மாதேஷ் கூறியதால், போட்டி கூட்டத்தில் பங்கேற்றது போல், கவுன்சிலர் தேவி மனுவில் கையெழுத்திட்டார்.