ADDED : ஜூலை 02, 2024 06:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : ஓசூர் அருகே பெரிய முத்தாலியை சேர்ந்தவர் லட்சுமப்பா, 27; பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் லேப் டெக்னீசியனாக பணியாற்றி வந்தார்; நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு, பஜாஜ் பிளாட்டினா பைக்கை, ஓசூர் பெரிய முத்தாலி சாலையில் ஓட்டி சென்றார்.
அப்பகுதியை சேர்ந்த முனிராஜ், 45, என்பவர் உடன் சென்றார். அக்கிராமத்திலுள்ள அரசு நடுநிலைப்பள்ளி அருகே, கட்டுப்பாட்டை இழந்து, பைக்கிலிருந்து இருவரும் கீழே விழுந்தனர். இதில், லட்சுமப்பா சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், படுகாயமடைந்த முனிராஜ் ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.