/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
அரசு பள்ளி மாணவர்கள் 141 பேருக்கு உதவித்தொகை
/
அரசு பள்ளி மாணவர்கள் 141 பேருக்கு உதவித்தொகை
ADDED : பிப் 25, 2025 06:46 AM
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், சூளகிரி, தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி தாலுகாவிற்கு உட்பட்ட அரசு பள்ளிகளில் கடந்த, 2023 - 24ம் கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2ல் பள்ளி அளவில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிய-ருக்கு, அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை சார்பில், கல்வி
உதவித்தொகை வழங்கும் விழா, ஓசூர் கே.ஏ.பி., திருமண மண்ட-பத்தில் நேற்று நடந்தது. ஓசூர், காங்., முன்னாள் எம்.எல்.ஏ., மனோகரன் தலைமை வகித்தார். அப்பாவுபிள்ளை பொன்னம்மாள் அறக்கட்டளை நிறுவனர் ஜோதிபிரகாஷ் முன்னிலை வகித்தார். ஓசூர், தி.மு.க., - எம்.எல்.ஏ., பிரகாஷ், மாநகர மேயர் சத்யா ஆகியோர் பேசினர்.தொடர்ந்து, தமிழக அரசின் முன்னாள் முதன்மை செயலாளரான ஐ.ஏ.எஸ்., அதிகாரி அசோக்வரதன் ஷெட்டி, ஓசூர் கல்வி மாவட்-டத்திற்கு உட்பட்ட, 105 அரசு பள்ளிகளை சேர்ந்த 10ம் வகுப்பு மாணவ, மாணவியர், 105 பேர் மற்றும் பிளஸ் 2 மாணவ, மாண-வியர், 36 பேருக்கு கல்வி உதவித்தொகை வழங்கி பேசினார். அப்-போது, மாணவ, மாணவியர் இன்ஜினியர், டாக்டர், வக்கீல் என எந்த உயர்கல்வி படித்தாலும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியாகி, மக்க-ளுக்கு சேவை செய்ய கேட்டுக்கொண்டார். மாவட்ட வரலாற்று ஆய்வு மைய ஒருங்கிணைப்பாளர் சத்திய-மூர்த்தி, மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்-வரன், மண்டல தலைவர் ரவி, ஆடிட்டர் மணி, தமிழியக்க அமைப்பு செயலாளர் வணங்காமுடி உட்பட பலர் பங்கேற்றனர்.