/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
வி.எச்.பி., சார்பில் திருவிளக்கு பூஜை
/
வி.எச்.பி., சார்பில் திருவிளக்கு பூஜை
ADDED : ஆக 20, 2024 02:35 AM
ஓசூர்: அகில இந்திய விஷ்வ ஹிந்து பரிஷத், 60 ம் ஆண்டு நிறைவையொட்டி, ஓசூர் மீரா மகாலில், மாத்ரு சக்தி மற்றும் துர்கா வாஹினி ஆகியவை சார்பில், 350 பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை மற்றும் ரக்ஷாபந்தன் விழா நேற்று நடந்தது. துர்காவாஹினி கோட்ட அமைப்பாளர் சுனிதாமதி வரவேற்றார். மாத்ரு சக்தி மாவட்ட சத்சங் அமைப்பாளர் பத்மஜா, மாவட்ட அமைப்பாளர் மதிகலா ஆகியோர், திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர். உலக நன்மை வேண்டியும், மக்கள் நோய், நொடியின்றி வாழவும் பூஜை நடந்தது.
கர்நாடகா மாநில பேச்சாளர் ஹாரிகா மஞ்சுநாத், தென்பாரத மாத்ரு சகதி அமைப்பாளர் பிந்து, வடதமிழக அமைப்பு செயலாளர் ராமன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், விஷ்வ ஹிந்து பரிஷத் வட தமிழக இணை செயலாளர் விஷ்ணுகுமார், சேலம் கோட்ட பொறுப்பாளர் தேவராஜ், பஜ்ரங்தள் வட தமிழக அமைப்பாளர் கிரண்குமார் உட்பட பலர் பேசினர்.