sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கிருஷ்ணகிரி

/

உயர்மட்ட பாலம் கேட்டு சாலைமறியல் 5 கி.மீ., துாரம் அணிவகுத்த வாகனங்கள்

/

உயர்மட்ட பாலம் கேட்டு சாலைமறியல் 5 கி.மீ., துாரம் அணிவகுத்த வாகனங்கள்

உயர்மட்ட பாலம் கேட்டு சாலைமறியல் 5 கி.மீ., துாரம் அணிவகுத்த வாகனங்கள்

உயர்மட்ட பாலம் கேட்டு சாலைமறியல் 5 கி.மீ., துாரம் அணிவகுத்த வாகனங்கள்


ADDED : பிப் 24, 2025 03:06 AM

Google News

ADDED : பிப் 24, 2025 03:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஓசூர்: சூளகிரி அருகே சப்படி வழியாக பெங்களூரு தேசிய நெடுஞ்-சாலை செல்கிறது. இங்கு வாகனங்கள் திரும்பி, மறு சாலைக்கு செல்ல, யூ டர்ன் அமைக்கப்பட்டுள்ளது.

வாகனங்கள் திரும்பும் போதும், பாதசாரிகள் சாலையை கடக்கும் போதும், வாகனங்கள் மோதி விபத்து ஏற்படுகிறது. சமீபத்தில் லாரி மோதி, 3 வயது பெண் குழந்தை பலியானது. அதேபோல், 10க்கும் மேற்-பட்டோர் உயிரிழந்துள்ளனர். அதனால், அப்பகுதியில் உயர்மட்ட மேம்பாலம் கட்ட, பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகின்-றனர். ஆனால், தேசிய நெடுஞ்சாலைத்துறை எந்த நடவடிக்-கையும் எடுக்கவில்லை. நேற்று மதியம், 3:15 மணிக்கு, சப்படி வழியாக தேசிய நெடுஞ்சாலையில் சென்ற தம்பதி மீது கார் மோதியதில் படுகாயமடைந்தனர். அவர்களை மீட்டு, அரசு மருத்துவமனைக்கு அனுப்-பிய மக்கள், உயர்மட்ட பாலம் அமைக்க வலியுறுத்தி சாலைமறி-யலில் ஈடுபட்டனர். அதனால், கிருஷ்ணகிரி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், 5 கி.மீ., துாரத்திற்கு மேல், போக்குவ-ரத்து பாதித்து, சாலையில் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

மாவட்ட எஸ்.பி., தங்கதுரை மற்றும் ஓசூர் ஏ.எஸ்.பி., அக்ஷய் அணில் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். இப்பகுதியில் உடனடியாக, 'சிசிடிவி' கேமரா பொருத்தப்படும். போலீசார் பாது-காப்பு பணிக்கு தினமும் நிறுத்தப்படுவர். உயர்மட்ட பாலம் அமைக்க தேசிய நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்வதாக உறுதியளித்தனர். இதனால் மாலை, 5:00 மணிக்கு மேல் மக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us