ADDED : பிப் 24, 2025 03:11 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர்: ஓசூர், கெலமங்கலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே, 35 முதல், 40 வயது மதிக்கத்தக்க பெண், நேற்று முன்தினம் ரயிலில் அடிபட்டு இறந்து கிடந்துள்ளார்.
ரயில்வே போலீஸ் எஸ்.எஸ்.ஐ., அய்யாதுரை, தனிப்பிரிவு காவலர் கார்மேகம் ஆகியோர், சடலத்தை கைப்பற்றி விசாரித்தனர். இறந்த பெண் யார், எந்த ஊரை சேர்ந்தவர் என்ற விபரம் தெரியவில்லை. அவ்-வழியாக வந்த ரயிலில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரிந்தது. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

