நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓசூர் : சூளகிரி அருகே மாரண்டப்பள்ளியை சேர்ந்தவர் ஹரிகுமார் மனைவி மாதம்மா, 26; கடந்த, 11ல் நண்பகல், 12:00 மணிக்கு வீட்டிலிருந்து வெளியே சென்றவர் மாயமானார்.
அவரது கணவர் சூளகிரி போலீசில் கொடுத்த புகாரில், மாரண்டப்பள்ளியை சேர்ந்த ராஜ்குமார் என்பவர் மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். போலீசார் மாதம்மாவை தேடி வருகின்றனர்.

