/
உள்ளூர் செய்திகள்
/
கிருஷ்ணகிரி
/
மும்பை போலீஸ் எனக்கூறி மிரட்டல் தனியார் ஊழியரிடம் ரூ.15 லட்சம் மோசடி

ADDED : ஆக 09, 2024 03:46 AM
கிருஷ்ணகிரி: மும்பை போலீஸ் எனக்கூறி, தனியார் நிறுவன ஊழியரிடம், 15.20 லட்சம் ரூபாயை பறித்தது குறித்து, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.
கிருஷ்ணகிரி திம்மராயன் தெருவை சேர்ந்தவர் விஜய்சங்கர். தனியார் நிறுவன ஊழியர். கடந்த ஜூலை, 31ல் இவரது மொபைல் போனிற்கு வந்த அழைப்பில், தான் மும்பை போலீஸ் அதிகாரி என்றும், சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டதாக, உங்-களின் மொபைல் போன் எண் பதிவாகி உள்ளது. எனவே, உங்கள் மீது வழக்குப்பதிய உள்ளோம். அதை தவிர்க்க, 20 லட்சம் ரூபாய் தர வேண்டும் என கூறியுள்ளார். இதில் பயந்து-போன விஜய்சங்கர், தன் வங்கிக் கணக்கில் இருந்த, 15.20 லட்சம் ரூபாயை அவர்கள் கூறிய வங்கி கணக்கிற்கு அனுப்பி-யுள்ளார். அதன் பின் எந்த அழைப்பும் வரவில்லை. இதனால் சந்-தேகமடைந்த விஜய்சங்கர், தனக்கு வந்த மொபைல் எண்ணில் தொடர்பு கொண்ட போது அது, 'சுவிட்ச் ஆப்' ஆகி இருந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் அளித்த புகார் படி, கிருஷ்ணகிரி சைபர் கிரைம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.